மாயா இயக்குநரின் அடுத்த மிரட்டல் - கேம் ஓவர் டீஸர் ரிலீஸ்!

Tapsees Game over teaser release

by Mari S, May 15, 2019, 12:27 PM IST

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ஒரு நல்ல ஹாரர் படம் என்றால் அது மாயா தான். இந்நிலையில், அதே ஸ்டைலில் வீடியோ கேமால் ஏற்படும் விளைவுகள் குறித்து சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் ஹாரர் படமாக உருவாகியுள்ளது கேம் ஓவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தில் நடிகை டாப்ஸி லீடு ரோலில் நடித்துள்ளார்.

தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, டோலிவுட் பாலிவுட் என கலக்கி வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியுள்ள அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாப்ஸிக்கு பாலிவுட்டிலும் மார்க்கெட் இருப்பதால், ஹிந்தியில் டப் செய்யப்பட்டும் ரிலீசாக உள்ளது.

காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் டாப்ஸி, மீண்டுமொரு பேய் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைவது குறிப்பிடத்தக்கது. கேம் ஓவர் படம் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாகிறது.

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது..! கமல் பேச்சு குறித்து பிரதமர் மோடி கருத்து

You'r reading மாயா இயக்குநரின் அடுத்த மிரட்டல் - கேம் ஓவர் டீஸர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை