சிஆர்பிஎஃப் வீரர்கள் பப்ஜி வீடியோ கேமை விளையாடக் கூடாது என உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பப்ஜி விளையாட்டை மாணவர்கள், இளைஞர்கள் விளையாடக் கூடாது என சில மாநிலங்கள் தடை விதித்தது. சிலர் பப்ஜி விளையாட்டை விளையாடியதால், உடல் நலம் குறைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் படை வீரர்களான சிஆர்பிஎஃப் வீரர்கள் பப்ஜி வீடியோ கேமை விளையாடக்கூடாது என உயர் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பப்ஜி விளையாட்டின் மோகத்தினால், அதற்கு அடிமையாகி பல வீரர்கள் இரவு நேரங்களில் தூங்காமல் கண் விழித்து விளையாடுவதாகவும், இது வீரர்களை மிகவும் பலவீனப் படுத்தியுள்ளதாகவும் கூறி பப்ஜி விளையாட்டை சிஆர்பிஎஃப் வீரர்கள் விளையாடக் கூடாது என்றும், விதியை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டினை 6 மணி நேரத்திற்கு மட்டுமே விளையாடும் அளவிற்கு அந்த விளையாட்டில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்த போதிலும், பப்ஜி பரிதாபங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து பெருகியே வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை பேச்சு! -கெஜ்ரிவாலுக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள்