அந்தபுரத்தில் ஜெயம்ரவி செய்யும் அட்டகாசம் கோமாளி 5வது லுக்கும் ரிலீஸ்!

Comali 5th look Poster Released Now

by Mari S, May 22, 2019, 17:06 PM IST

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் 5வது லுக்கை தற்போது இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டார்.

வேல்ஸ் ஃபில்ம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவியின் 24வது திரைப்படம் கோமாளி என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.

நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடத்தில் நடித்தது போல, கோமாளி படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஆனால், ஒவ்வொரு கெட்டப்பும் வேறு வேறு காலக்கட்டத்தில் நிகழ்வது போல உள்ளன.

கடந்த மே 18ம் தேதி கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 5வது நாளான இன்று 5வது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

போராளி கெட்டப்பான 4வது லுக்கை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்ட நிலையில், 5வது லுக்கை இன்று இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார்.

இந்த லுக்கில் அந்தபுரத்தில் பல இளம்பெண்களுடன் உல்லாசமாக ஜெயம் ரவி இருப்பது போல உள்ளது.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவியின் கோமாளி படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

You'r reading அந்தபுரத்தில் ஜெயம்ரவி செய்யும் அட்டகாசம் கோமாளி 5வது லுக்கும் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை