எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து செல்வராகவன் படத்துக்கும் யு சான்றிதழ்!

Selvaraghavan gets U Certificate for NGK Movie

by Mari S, May 22, 2019, 17:23 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மே 31ம் தேதி என்ஜிகே ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடல்ட் பட இயக்குநர்களாக இதுவரை முத்திரை குத்தப்பட்ட இயக்குநர்களில் முதன்மையாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் செல்வராகவன் படங்களுக்கு அடுத்தடுத்து யு சான்றிதழ் கிடைப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல மாற்றம் என்றே சொல்லலாம்.

அண்மையில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதன்முறையாக தன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என எஸ்.ஜே.சூர்யா பட விழாவில் பேசினார்.

இந்நிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

அரசியல் மற்றும் வன்முறை காட்சிகள் டிரைலரில் நிரம்பி வழிந்த நிலையில், படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திட்டமிட்டபடியே என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகிறது என படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார்.

You'r reading எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து செல்வராகவன் படத்துக்கும் யு சான்றிதழ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை