கொலைகாரன் படத்தின் கொல்லாதே கொல்லாதே பாடல் ரிலீஸ்!

Kolaigaran Movie Kollathe Kollathe Song Release

by Mari S, May 24, 2019, 19:34 PM IST

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ‘கொல்லாதே கொல்லாதே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் மற்றும் ஆஷிமா நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ‘கொல்லாதே கொல்லாதே’ பட பாடல் தற்போது ரிலீசாகி உள்ளது. வரும் ஜூன் 5ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் வீடியோ பாடலை வெளியிட்டு புரமோஷனை துவக்கியுள்ளனர் படக்குழு.

நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் என ஆரம்பத்தில் தொடர் வெற்றியை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி, அடுத்ததாக, சைத்தான், எமன், காளி, அண்ணாதுரை மற்றும் திமிரு புடிச்சவன் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களும் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜய் ஆண்டனிக்கு கொலைகாரன் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார்.

கடந்த ஆண்டு விஷால் மற்றும் அர்ஜுன் காம்போவில் வெளியான இரும்புத்திரை படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், அர்ஜுனுடன் கை கோர்த்துள்ளார் விஜய் ஆண்டனி.

You'r reading கொலைகாரன் படத்தின் கொல்லாதே கொல்லாதே பாடல் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை