அனல் பறக்கும் என்ஜிகே டிக்கெட் புக்கிங்!

by Mari S, May 28, 2019, 19:16 PM IST
Share Tweet Whatsapp

சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமானது. ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே வேகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. அதற்கு பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து சூர்யா படம் வெளியாவதால், சூர்யாவின் ரசிகர்கள் என்ஜிகே படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் முதல் யு சான்றிதழ் படமாக என்ஜிகே ரிலீசாகிறது. படத்தில் இடம்பெற்ற ஆபாச வசனங்களுக்கு கட் கொடுத்துவிட்டு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், எந்தவொரு காட்சியையும் வெட்டவோ, ப்ளர் செய்யவோ இல்லையாம்.

இதனால், குடும்பத்துடன் சூர்யா படத்தை பார்க்க கோடை விடுமுறை கடைசி நேரத்தில் மக்கள் இந்த வாரம் தியேட்டர்களில் அலைமோதுவார்கள் என்பதால், படம் எதிர்பார்த்த வசூலை அடையும் என சினிமா வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Leave a reply