அனுஷ்கா சர்மாவின் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் மொமெண்ட்

Anushka Sharma Cute photoshoot goes viral

by Mari S, May 29, 2019, 17:07 PM IST

ரோஜாப்பூவின் நறுமணத்தை நுகர்ந்து பார்க்கும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் நாளை முதல் இங்கிலாந்தில் துவங்குகிறது. முன்னதாக கடந்த பத்து நாட்களாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியை வழி நடத்தி செல்லும் கேப்டன் கோலியுடன் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் வழக்கம் போல் உடன் சென்றுள்ளார்.

இங்கிலாந்தில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இன்று பூந்தோட்டம் ஒன்றிற்கு சென்றுள்ள அனுஷ்கா சர்மா, அங்குள்ள வெள்ளை ரோஜாப்பூ செடியருகே சென்று அதன் நறுமணத்தை நுகர்ந்து பார்க்கும் போட்டோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல தனது கணவருக்கு சியர் அப் செய்ய அனுஷ்கா சர்மா உடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

You'r reading அனுஷ்கா சர்மாவின் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் மொமெண்ட் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை