விஸ்வாசம் கட் அவுட்டை பின்னுக்குத் தள்ளிய சூர்யாவின் என்ஜிகே கட் அவுட்

by Mari S, May 29, 2019, 17:27 PM IST
Share Tweet Whatsapp

கட் அவுட் வைப்பதில் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சூர்யாவின் என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஸ்வாசம் படத்துக்கு வைத்ததை விட மிகப்பெரிய கட் அவுட்டை வைத்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சூர்யா நடிப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படம் ரிலீசாவதால், சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை வேற லெவல் வெற்றியடைய வைக்க வேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.

விஜய்யின் மெர்சல் மற்றும் சர்கார் படங்களுக்கு 185 அடி வரை உயரமான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு புதிய சாதனையை விஜய் ரசிகர்கள் செய்தனர். அஜித்தின் விஸ்வாசம் கடந்த பொங்கலன்று வெளியானபோது, அஜித் ரசிகர்கள் அந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென நினைத்து 190 அடி உயர கட் அவுட்டை வைத்து கெத்து காட்டினர்.

ஆனால், தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூர்யா ரசிகர்கள் 215 அடியில் உலகின் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். கையில் தீபந்தத்துடன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் சூர்யாவின் மாஸ் கட் அவுட் குறித்த செய்தி ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்தியளவில் வைரலாகி வருகிறது.


Leave a reply