கேப்டன் மார்வெல் படத்தின் காப்பியா? எக்ஸ்மென் டார்க் பீனிக்ஸ் விமர்சனம்!

மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் படத்தின் காப்பியாகவே டார்க் பீனிக்ஸ் படம் வெளியாகி உள்ளது. ஆனால், கேப்டன் மார்வெல் படத்திலிருந்து சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பான கதைக்களம் இந்த படத்தில் பெரியளவில் மிஸ்சிங். சரி டார்க் பீனிக்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மனிதர்களுடன் மனிதர்களை போலவே வாழும் அசாத்திய திறமை உள்ள மியூட்டண்ட்கள் குறித்த கதை தான் எக்ஸ்மென். ஆரம்பத்தில் ஹக் ஜேக்மேன் வால்வரினாக நடித்திருந்த பாகங்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை எக்ஸ்மென் படங்களுக்கு அள்ளித் தந்தன.

எக்ஸ்மென் ஃபர்ஸ்ட் கிளாஸ் படத்தில் இருந்து ஹக் ஜேக்மனை கழட்டி விட்டு, சார்லஸ் சேவியர் மற்றும் மேக்னட்டோவின் இளமைக் கால கதாபாத்திரங்கள் குறித்த கதைக் களத்தில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வருகின்றன.

அவர்களுக்கு இனி வயசாகும் என்ற நம்பிக்கையும், எதிர்கால எக்ஸ்மென் படங்கள் வரும் என்ற நம்பிக்கையும் எக்ஸ்மென் ரசிகர்கள் இழந்து வெகுகாலம் ஆகி விட்டது.

அவெஞ்சர்ஸ் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் இருந்த எக்ஸ்மென் படங்கள் தற்போது, அழுத்தமான கதைகள் இல்லாததால், பின் தங்கி விட்டன.

கேம் ஆஃப் த்ரோன்ஸில் சான்ஸா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் அசத்திய சோபி டர்னர், 1996ல் தான் பிறந்தார். வெறும் 23 வயதாகும் இவரிடம் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை எக்ஸ்மென் படக்குழு கொடுக்க காரணம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூலம் உலகளவில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் தான்.

இந்த படத்தில் ஜீன் க்ரேவாக அதீத சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோவாக உள்ள சோபி டர்னர், ஆரம்பம் முதல் இறுதி வரை அழுத்தமான உடல் மொழியுடனே நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு இந்த படத்தில் வலிமையான வில்லன் கதாபாத்திரம் அமையாத ஒரே காரணம் தான் படம் பல இடங்களில் பலமிழந்து போர் அடிக்க காரணம் ஆகிவிடுகிறது.

பிரபஞ்சத்தை ஆக்கும் மற்றும் அழிக்கும் அளவு கடந்த சக்தியை ஜீன் க்ரே எப்படி உள்வாங்குகிறார். அவருக்கு உண்மையில் இருக்கும் சக்தி தான் என்ன? ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறப்பதால், தந்தையே மகளை வெறுத்து ஒதுக்குவாரா? என்ற பல கேள்விகள் படத்தை பார்க்கும் போதே எழுகின்றன.

கேப்டன் மார்வெல் கதாபாத்திரமாவது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு உதவும் என்பதால், உருவாக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த டார்க் பீனிக்ஸ் எதற்காக எடுக்கப்பட்டது என்பதும், அதனை கட்டுப்படுத்த சார்லஸ் சேவியர் கிளைமேக்ஸில் செய்யும் குழந்தைத் தனமான விசயமும் படத்தை டோட்டல் வாஷ் அவுட் செய்துவிட்டது என்றே சொல்ல தோன்றுகிறது.

மொத்தத்தில் சைமன் கின்பர்க் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் எக்ஸ்மென் ரசிகர்களுக்கு ஈர்ப்பை வழங்காது என்றாலும், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கிராபிக்ஸ் விருந்தாக அமையும்.

மூவி ரேட்டிங்: 2.25/5.

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds