தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்தைத் தொடர்ந்து, கங்கனா ரணாவத் நடிப்பில் ஜான்சி ராணி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ’மணிகார்னியா’ படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
தற்போது இந்திய திரைத்துறையில் வரலாற்று பின்னணியை மையாகக் திரைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகுபலி 1, மற்றும் பாகுபலி 2 அனைத்து மொழிகளிலும் வெளியானது. தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி, மொஹஞ்சதாரோ, ருத்ரமாதேவி என அடுத்தடுத்து வெளியாகின.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ரண்வீர் சிங் நடிப்பில் வெளியான ’பத்மாவத்’ திரைப்படம் பல எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது பாலிவுட் நடிகை, கங்கனா ரணவத் நடிப்பில் ’மணிகார்னிகா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாயின் வரலாற்றை சொல்லும் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
ஆனால். படம் வெளியாவதற்குள், சர்வ பிரமாண சபை, ராஜ்புத் இனத்தவர்கள் போன்ற இந்து அமைப்பினர் படத்திற்கு போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்த படத்தில், ஜான்சி ராணி வெள்ளைக்காரை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.