அனிருத்துக்கு டிமிக்கு கொடுத்த சிவா - அஜித் படத்திற்கு புதிய இசையமைப்பாளர்

அனிருத்துக்கு டிமிக்கு கொடுத்த சிவா - அஜித் படத்திற்கு புதிய இசையமைப்பாளர் அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படமான விசுவாசம் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் த

Feb 9, 2018, 21:09 PM IST

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படமான விசுவாசம் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் விசுவாசம். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள மூன்றில் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். அதனால், விசுவாசம் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக டி.இமான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அஜித் நடிக்கும் திரைப்படத்திற்கு முதன் முறையாக இமான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading அனிருத்துக்கு டிமிக்கு கொடுத்த சிவா - அஜித் படத்திற்கு புதிய இசையமைப்பாளர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை