ஆடை படப்பிடிப்பு பற்றி அமலாபால் புதிய தகவல்

‘‘அந்த காட்சியில் நடித்த போது எனக்கு படபடப்பு ஏற்பட்டது. அப்போது செட்டில் 15 பேர் இருந்தனர்...’’ என்று ஆடை படப்பிடிப்பு பற்றி புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார் அமலா பால்.

மைனா, சிந்துசமவெளி, தெய்வத்திருமகள் உள்பட தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால்். 27 வயதான அமலா பாலுக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன்பிறகு, மிகவும் துணிச்சலாகவும், கவர்ச்சியாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் டீசர் வெளியான போது ரசிகர்களிடையே அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார். மேலும், கொடூரமான கும்பலிடம் இருந்து தப்பித்தது போல் ஒரு முகபாவனையுடன் அவர் நடித்துள்ள காட்சி, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆடை படப்பிடிப்பு குறித்து அமலாபால், ‘தி இந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் சொன்னது...

‘‘படத்தில் நிர்வாணமாக நடிக்கும் காட்சியில் அப்படி காட்டும் ஒரு ஸ்பெஷல் காஸ்ட்யூம் அணிந்து கொள்ளலாமா என்று டைரக்டர் ரத்தினகுமார் என்னிடம் கேட்டார். நான் அதற்கு ‘‘ஒன்றும் பிரச்னை இல்லை, பார்த்து கொள்ளலாம்’’ என்று சொல்லி விட்டேன்.

ஆனால், அந்த காட்சி படமாக்கப்பட்ட போது, எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஷூட்டிங் எப்படி நடக்கும்? யாரெல்லாம் அந்த சமயத்தில் செட்டில் இருப்பார்கள்? என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது? என்பதை எல்லாம் முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பின் போது செட்டில் 15 பேர் இருந்தார்கள். படக்குழுவினர் மீது நான் நம்பிக்கை வைத்திருக்காவிட்டால், நான் அந்தக் காட்சியில் நடித்திருக்கவே மாட்டேன்’’
இவ்வாறு அமலாபால் தெரிவித்தார். ‘‘சினிமா தயாரிப்பாளர்கள் தன்னிடம் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு வந்தார்கள். கற்பழிப்புக்கு உள்ளான பெண் பழிவாங்குவது, கணவருக்காகவே வாழும் தியாகப் பெண் என்று பொய்யான வேடங்களில்தான் நடிக்கச் ெசான்னார்கள். இதையெல்லாம் கேட்டு ஒரு கட்டத்தில் திரையுலகை விட்டு சென்று விடலாம் என்று தோன்றியது’’ என்றும் அமலா பால் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
hanshika-undergone-a-surgery-for-reducing-fat
உடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..
comedy-actor-sathish-got-engaged
காமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்!
director-vzdurai-is-to-direct-simpu-and-vijay-antony-films-soon
சிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை
sivakarthikeyan-scifi-movie-resume-in-november
சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா?
biggboss-season-4-anchor-name-revealed
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?
happy-birthday-atlee
ஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே!
is-nayanthara-will-attend-syera-audio-launch
பிகிலுக்கு பை சொன்ன நயன்தாரா.. சைராவுக்காவது ஹாய் சொல்வாரா?
sangaththamizhan-trailer-released
சங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா?
bigil-juke-box-released
இதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க?
world-famous-lover-first-look-released
என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?
Tag Clouds

READ MORE ABOUT :