நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?

by Mari S, Jul 11, 2019, 17:03 PM IST
Share Tweet Whatsapp

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வாரம் இரண்டு படங்கள் நான்கு படங்கள் என்ற போட்டியெல்லாம் தாண்டி வாரம் 6 படங்கள் ரிலீசாகும் சூழல் உருவாகி விட்டது.
பெரிய படங்கள் என்ற கணக்கில் மூன்று படங்களும் சிறு பட்ஜெட் படங்கள் என்ற கணக்கில் மூன்று படங்களும் வெளியாகின்றன.

ஆனால், இந்த வாரம் ரிலீசாகவுள்ள ஆறு படங்களும் சிறு பட்ஜெட் படங்கள் தான். ஆனால், அதில், ஜீவா, விக்ராந்த், யோகி பாபு என முன்னணி நடிகர்கள் நடித்த மூன்று படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஜீவா, ஷாலினி பாண்டே மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள கோரில்லா படம் நாளை ரிலீசாகிறது. விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு 2 படம் மற்றும் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் கூர்கா என மூன்று கொஞ்சம் பெரிய படங்களும், தோழர் வெங்கடேசன், வளையல், போதை ஏறி புத்தி மாறி ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் நாளை வெளியாகின்றன.

இந்த படங்களில் ஜீவாவின் கொரில்லா மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 படத்திற்கு லேசான எதிர்பார்ப்புகள் உள்ளன. மற்றபடி மற்ற படங்களுக்கு பெரிதான எதிர்பார்ப்பு இல்லை. சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான தர்மபிரபு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், யோகிபாபுவின் கூர்கா படத்திற்கு கணிசமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த வாரம், விக்ரமின் கடாரம் கொண்டான் மற்றும் அமலா பாலின் ஆடை திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரத்தை விட அடுத்த வாரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply