தீபிகா படுகோன் நடிப்பில் பல சர்ச்சைகளுக்குப் பின் வெளியானத் திரைப்படம் 'பத்மாவத்'. இந்தத் திரைப்படம் உலகம் எங்கும் வெளியாகி பட்டையைக் கிளப்பி வரும் வேளையில் இந்தியாவில் மட்டும் மூன்று வாரத்தில் சுமார் 300 கோடிக்கு நிகரான லாபம் ஈட்டியுள்ளது 'பத்மாவத்'.
ராஜ்புத்ர வம்சத்தின் மகாராணியான ராணி பத்மாவதியின் கதையை தரம் குறைவாகப் படம் பிடித்துள்ளதாகக் கூறி 'பத்மாவத்' திரைப்படத்துக்கு நாட்டின் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அமைப்பினர், அரசியல் கட்சியினர் எனப் பல தரப்பிலிருந்தும் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நாயகி தீபிகா ஆகியோருக்குக் கொலை மிரட்டலும் வந்தது. ஆனால், பல தடைகளுக்குப் பின்னர் சமீபத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் தயாரான 'பத்மாவத்' திரைப்படம் வெளியானது.
திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 'பாக்ஸ் ஆபிஸ் ஹிட்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் 'பத்மாவத்'. தற்போது வெளியான மூன்று வாரங்களில் 260.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் 200 கோடியைத் தாண்டிய மெகா ஹிட் படத்தின் நாயகிகளின் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார் தீபிகா. இதுபோன்ற நாயகர்களின் பட்டியலிலும் ரன்வீர் சிங் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டியில், "இந்த 300 கோடி முடிவல்ல. வசூல் இன்னும் உள்ளது" என மிகவும் பெருமையாகவே கூறியுள்ளார்