வெளிநாடு சென்றாலும் நீட் எழுத வேண்டும் - மோடி அரசு அடுத்த அட்டாக்

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று புதிய உத்தரவு ஒன்றை மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

Feb 15, 2018, 10:46 AM IST

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று புதிய உத்தரவு ஒன்றை மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்‘ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதுவது, கடந்த 2016-ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. கடந்தாண்டு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்ட மாணவ- மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையானது, வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்க முயலும் மாணவர்கள் மீதும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்கச்செல்லும் மாணவர்களும் ‘நீட்‘ தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்று அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தற்போது, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் இருந்து பெறும் அடிப்படைச் சான்றிதழை மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்றுள்ள நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

You'r reading வெளிநாடு சென்றாலும் நீட் எழுத வேண்டும் - மோடி அரசு அடுத்த அட்டாக் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை