நம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்!

NammaVettuPillai Movie Song Update

by Mari S, Aug 22, 2019, 17:34 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் ’எங்க அண்ணன்’ பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற உள்ள ‘எங்க அண்ணன்’ பாடலை யார் எழுத உள்ளார் என்ற கேள்வியை ஒரு போட்டியாக சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் நடத்தியது.

தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அந்த பாடலாசிரியர் என்ற விவரத்தை அறிவித்துள்ளனர்.

இமான் இசையமைப்பில் முதன்முறையாக விக்னேஷ் சிவன் பாடல் எழுத உள்ளார்.

நானும் ரவுடிதான் படத்திற்கு விக்னேஷ் சிவன் பாடல் எழுதியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு பாடல் எழுதுகிறார். இந்த பாடலை நாகாஷ் ஆசிஸ் மற்றும் சுனிதி சவுகான் இணைந்து பாடுகின்றனர்.

More Cinema News


அண்மைய செய்திகள்