ஜாக்கிசானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்!

by Mari S, Aug 24, 2019, 14:51 PM IST

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நான்காவது இடத்தில் நடிகர் அக்ஷய் குமார் உள்ளார்.

சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வறிக்கையின் படி, 2019ம் ஆண்டு இதுவரை அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஆசியாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான ஜாக்கி சானை பின்னுக்கு தள்ளி 4ம் இடத்தை பிடித்துள்ளார். 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தை ஈட்டி அக்ஷய் குமார் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவர் நடிப்பில், இந்த ஆண்டு கேசரி, மிஷன் மங்கள் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் 2.0 என அடுத்தடுத்து பல படங்கள் மற்றும் விளம்பரங்கள் வெளியாகின. பாலிவுட்டின் கான் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் நடிகர்கள் இந்த பட்டியலில் டாப் 10 இடங்களை கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தை டுவைன் ஜான்சன் (தி ராக்) பிடித்துள்ளார். 2019ம் ஆண்டு இதுவரை 90 மில்லியன் டாலர்களை அவர் சம்பாதித்துள்ளார். அடுத்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் நடித்த தோர் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் 77 மில்லியன் டாலர்களுடன் 2ம் இடத்திலும், ராபர்ட் டவுனி ஜூனியர் 66 மில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் நடிகர் ஜாக்கி சான் 58 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 5ம் இடத்தில் உள்ளார்.


Leave a reply