கோமாளி ஹாய் சொன்னா போதும் பாடல் வீடியோ ரிலீஸ்!

by Mari S, Aug 26, 2019, 14:24 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் கோமாளி படத்தின் முதல் பாடலான ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான கோமாளி திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது.

இந்த படத்தில், ஜெயம் ரவி, பள்ளி மாணவனாக வரும் ஆரம்ப காட்சியில் இடம்பிடித்துள்ள ஹை சொன்னா போதும் பாடல், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ரொமாண்டிக் பாடலாக மாறியுள்ளது.

90களில் பிறந்த குழந்தைகள் தங்களது இளமை பருவத்தில் பள்ளியில் செய்த சேட்டைகளை கோர்வையாக அடுக்கி இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதியின் அட்டகாச இசையில், உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்த பாடலில், சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தாலும், காஜல் அகர்வாலை காட்டிலும் இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம் மற்றும் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 சம்மரிலே சரவெடி; தளபதி 64 மாஸ் அப்டேட்!


Leave a reply