மேகமாய் வந்து போகிறேன் போன்ற பல ஹிட் பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் முத்து விஜயன் உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.

விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்து விஜயன், இவர் சில காலமாக மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா, மேகமாய் வந்து போகிறேன் உள்ளிட்ட 800 பாடலகளை இதுவரை எழுதியுள்ள முத்து விஜயன், நேற்று தீடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்.
கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த இவர், சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வாழ ஆரம்பித்தார்.
மஞ்சள் காமாலை வந்தால், குடி பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் சொல்லும் அபாய எச்சரிக்கை, அதனை மீறியதாலே இவர் மரணிக்க நேர்ந்ததாகவும், இவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
நா. முத்துக்குமாரை தொடர்ந்து கவிஞர் முத்து விஜயனும் சீக்கிரமாகவே இவ்வுலகை விட்டு சென்றுள்ளார். இதனால், கவிஞர்கள் மற்றும் திரையுலகத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.














