அருண்விஜயின் அடுத்த படம் !

by Mari S, Sep 11, 2019, 19:05 PM IST
Share Tweet Whatsapp

தடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது. 


நீண்ட நாட்கள் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அருண்விஜய்க்கு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அருண்விஜய் தன் உடம்பை கட்டுக்கொப்பாக மாற்றிக்கொண்டு பட வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் நடித்த அருண்விஜய்க்கு அந்த படத்தின் வெற்றுக்கு பின்னர் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. சமிபத்தில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட சாஹோ படத்திலும் அருண்விஜய் நடித்துள்ளார். மேலும் பாக்சர், மாஃபியா போன்ர படங்கள் இவர் நடிப்பில் வெளிவர தயாராகி வருகிறது.
இந்நிலையில், நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேல், இவர் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடித்து வருகிறார், அருண்விஜய். பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டண்ட் சில்வா இந்த படத்தின் சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.


Leave a reply