இயக்குநரான புளூசட்டை மாறன் வாழ்த்துக்களுக்கு பதில் குவிகிறது டிரோல்!

by Mari S, Sep 14, 2019, 07:33 AM IST
Share Tweet Whatsapp

தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனல் மூலம் சினிமா விமர்சனங்களை கூறி வந்த புளூசட்டை மாறன் இயக்குனராகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதற்கு பதில், ரசிகர்கல் டிரோல் போட்டு சபித்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் புளூசட்டை மாறன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகையே விமர்சனத்தின் மூலம் கதிகலங்க வைத்த புளூசட்டை மாறன், இப்போ இயக்குநராகி உள்ள நிலையில், ”நீ படம் எடு, நான் ரிவ்யூ பண்றேன், உன் படம் ஊத்திக்கும், தலைவா கிரீஸ் டப்பாவா எப்படி உதைச்ச போன்ற பல மீம்ஸ்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

புளூசட்டை மாறனின் வளர்ச்சி என்பது யூடியூபை தாண்டி சினிமா வரை சென்றுவிட்டது. பெரும்பாலும், இவரது விமர்சனங்களில் எந்த படத்தை எடுத்தாலும், அந்த படத்தை நக்கலடித்தும் அந்த படத்தில் பணியாற்றியவர்கள் குறித்த கிண்டல் பேச்சுமாகவே விமர்சனம் செய்வார். ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக பார்க்கப்பட்ட இவரது விமர்சனங்கள், பின்னர், பல இயக்குநர்களுக்கு தலைவலியாகி போய், இவரை திட்டவும் ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கும் சென்றது.

கடந்த ஓராண்டுக்கு முன்னர், தான் ஒரு படத்தை இயக்கப்போவதாக மாறன் அறிவித்ததில் இருந்து எப்போ நீ படம் பண்ணுவ, அத நான் ரிவ்யூ பண்ணி கிழிக்கிறேன் பாரு போன்ற கமெண்டுகள் அவரது ஒவ்வொரு விமர்சன வீடியோவிலும் கண்டிப்பாக வந்த வண்ணமே இருந்து வருகிறது.

இந்நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணத்தில் தனது இயக்குநர் பயணத்தை மாறன் தொடங்கிவிட்டார். இந்த படத்தில் நாயகன், நாயகி மற்றும் நடிகர்கள் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply