சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியாகியுள்ள சீமராஜா ஃபர்ஸ்ட் லுக்!

by Rahini A, Feb 17, 2018, 12:15 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ளனர். வருகிற விநாயகர் சதுர்த்தியின் போது 'சீமராஜா' வெளியாகும் எனத் திரைப்படக் குழுவினாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பொன்ராஜ் இயக்கத்தில் இமான் இசையில் திரையில் தெறிக்கவிடக் காத்திருக்கிறது சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'. இந்த மூவர் கூட்டணியில் தொடர்ச்சியாக வெளிவரும் படங்களால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

You'r reading சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியாகியுள்ள சீமராஜா ஃபர்ஸ்ட் லுக்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை