மீண்டும் பாலிவுட் படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார் அசின்!

Asin comeback to acting with a bollywood movie

by Mari S, Sep 17, 2019, 09:10 AM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த நடிகை அசின், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட்பை சொல்லியிருந்தார். தற்போது, மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜித்துடன் ஆழ்வார், வரலாறு, சூர்யாவுடன் கஜினி, வேல் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அசின்.

மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த அசின், பின்னர், பாலிவுட்டுக்கு பறந்தார்.

பாலிவுட்டிலும் முன்னணி நாயகர்களுடன் நடித்த அசின், மைக்ரோமேக்ஸ் ஓனரை காதலித்து திருமணம் செய்து குடும்ப வாழ்வில் செட்டில் ஆகி விட்டார். அவருக்கு அரின் என்ற ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில், தற்போது, மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை அசின் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அதற்கான போட்டோஷூட் ஒன்று நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசின் வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை