நான்கு நாயகிகளுடன் உலக காதலரான விஜய் தேவரகொண்டா!

by Mari S, Sep 17, 2019, 15:39 PM IST

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நான்கு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

கிரந்தி மாதவ் இயக்கும் புதிய படத்திற்கு வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா மற்றும் இசபெல்லா லெய்டே ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கின்றனர்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல்லா ஆகியோர் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகின்றனர். ஏற்கனவே கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கான கெளசல்யா முருகேசன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு உலகிற்கு அறிமுகம் ஆனாலும், இந்த படம் தான் அவரது நேரடி தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சிகளை கவனித்து வருகிறார். ஏற்கனவே ஐதராபாத்தில் மிகப்பெரிய கார் சேஸிங் சண்டை காட்சியையும் படக்குழு படமாக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை