பாலிவுட் கோமாளி யார் தெரியுமா?

Comali remake in bollywood, arjun kapoor is the lead

by Mari S, Sep 23, 2019, 08:48 AM IST

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.

பிங்க் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழில் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான். தமிழில் வெளியாகி 6 வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் கோமாளி படத்தின் உரிமையை வாங்கி பாலிவுட்டில் படம் எடுக்க உள்ளார்.

இதுகுறித்து கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீபி ரங்கநாதன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோமாளி படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது உண்மை தான். போனி கபூர் தான் கோமாளி படத்தின் உரிமையை கைப்பற்றி பாலிவுட்டில் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்த ரோலில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் கபூர் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவலையும் அறிவித்தார்.

இதனை உறுதி செய்த அர்ஜுன் கபூர், தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி மற்றும் தனி ஒருவன் படங்களை பார்த்து மிரண்டு போயுள்ளேன். அவர் அளவுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேனா என்பது சந்தேகம் தான். ஆனால், என்னால் முடிந்த பெஸ்ட்டை கொடுப்பேன் என ஜெயம் ரவி மற்றும் கோமாளி படக்குழுவை பாராட்டியுள்ளார்.

ஆலியா பாட்டுடன் அர்ஜுன் கபூர் நடித்த 2 ஸ்டேட்ஸ் படம் இந்தியளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாலிவுட் கோமாளி யார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை