இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவையும், தமிழக அரசியலையும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
இன்றும், அவரது பெயரை சொல்லியே பல தலைவர்களும், வருங்கால அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் தங்களின் குட்டிக் கதைகளையும் புலப்பையும் ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் தற்போது சசிகுமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்க உள்ளார். இன்று அதற்கான பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நாயகியாக ஒப்பந்தாமியுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் பெண்ணாக மிருணாளினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீமராஜாவின் தோல்வி காரணமாக புதிய கூட்டணியில் பொன்ராம் இணைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
எம்.ஜி.ஆர் மகன் என்ற டைட்டிலை வைத்திருப்பதற்கு அ.தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.