பிரபாஸ் படத்தில் நடிக்க மாட்டேன் – பூஜா ஹெக்டே !

சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் ஜான் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பூஜா ஹெக்டே திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார்.

பல கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்த சாஹோ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் ரிலீஸுக்கு பிறகு படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. பல கோடி செலவு செய்தும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என படக்குழு அதிர்ச்சியில் இருந்தது.

மேலும் இப்படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் பிரபாஸின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெவ்வேறு பார்வைகளில், படத்தில் காமெடி இல்லை என பல வகையான விமர்சனங்கள் இருந்தன. இதனை பார்த்து, ஜான் படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளார் நடிகர், பிரபாஸ்.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியுள்ளது ஜான் படம். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு மட்டும் காமெடி காட்சிகளை சேர்க்க சொல்லி இருக்கிறார் பிரபாஸ்.  இந்த சிக்கலினால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனால் இந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இந்த படத்திலிருந்து தற்போது விலகியுள்ளார்.

மேலும் அவர் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் பாஸ்கர் இயக்கும் புதிய படத்தில் நாகார்ஜூனின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பூஜா ஹெக்டே ஜான் படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் அந்த படத்தின் தாமதத்தாலா இல்லை, புதிய படத்தின் கமிட்மண்டாலா என்று தெரியவில்லை. விரைவில் ஜான் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

Advertisement
More Cinema News
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வாலர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
gautham-menon-talks-about-the-success-of-yennai-arindhaal
அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
tamil-movie-ammbulla-gilli
லேப்ராடர் நாய் நடிக்கும் அன்புள்ள கில்லி.. அருண்ராஜ் காமராஜ் குரலில் பாடல், ..
jai-pairs-with-athulya-again
ஜெய்யோடு மீண்டும் ஜோடி போடும் அதுல்யா.. எண்ணித் துணிக  
lokeshkanagaraj-hashtag-on-twitter
கைதி 50 மகிழ்ச்சி வெளியிட்ட இயக்குனர்.. தளபதி ரசிகர்கள் சரமாரி கேள்வி..
sivakarthikeyan-talk-about-hero-film
3 பாகம் படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்...ஹீரோ பட விழாவில் பேச்சு..
Tag Clouds