கோமாளி இயக்குனருடன் இணையும் விக்ரம்!

by Mari S, Sep 25, 2019, 19:49 PM IST

கோமாளி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது இவர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, காஜல், யோகி பாபு என பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கோமாளி இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு படத்தின் கதையும் அதில் நடித்த கதாபாத்திரங்களும் இருந்தது.

இந்த படம் மக்களிடையிலும், விமர்சனர்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் அப்படக்குழுவின் சார்பில் அந்த படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு புதிய கார் அண்மையில் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் படத்திலும் விக்ரம் இணைந்துள்ளார். மேலும் அந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Speed News

 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST
 • மகாராஷ்டிராவில் ஒரே நாளில்

  4878 பேருக்கு கொரோனா

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

  Jul 1, 2020, 13:43 PM IST
 • ராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு

  கொரோனா தொற்று பாதிப்பு

  ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 

  ராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது. 

  Jul 1, 2020, 13:40 PM IST
 • தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு

  சி,பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவு

  சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால்,  வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். 

  Jun 30, 2020, 13:33 PM IST