சிவகார்த்திகேயன் சிபாரிசில் தமிழில் அறிமுகமாகும் பிரியங்கா

Priyanka roped in to romance Sivakarthikeyan

by Chandru, Oct 1, 2019, 16:11 PM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து திரைக்கு வந்திருக்கும் நம்ம வீட்டி பிள்ளை ஹிட்டானதையடுத்து குஷியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சந்தோஷத்துடன் அடுத்து நடித்து வரும் ஹீரோ படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார்.

இப்படத்தை மித்ரன் இயக்குகிறார். இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சைன்ஸ் பிக்ஸன் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திக்கு ஜோடியாக நடிக்க நன்கு தமிழ் பேச தெரிந்த குடும்ப தோற்றம் கொண்ட ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர். அவரிடம் பிரியங்கா அருள் மோகனை சிபாரிசு செய்தார் சிவகார்த்திகேயன்.

இவர் தெலுங்கில் கேங் லீடர் படத்தில் நடித்தவர். தமிழ், கன்னடம் சரளமாக பேச தெரிந்த பிரியங்கா பக்கத்து வீட்டு பெண்ணைப்போன்ற இயல்பான தோற்றம் கொண்டவர்.

நெல்சன் திலீப்குமாரும், சிவகார்த்திகேயனும் டிவியில் பணியாற்றிய காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதால் நட்பு ரீதியாக பிரியங்காவை சிவா சிபாரிசு செய்தாராம். கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று எண்ணிய இயக்குனர் பிரியங்காவையே ஹீரோயினாக்கிவிட்டார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை