நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா இருவரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற 4 வயது மகன் இருக்கிறான்.
முதல் குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் படம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். சில தினங்களுக்கு முன் அவரது வீட்டில் சினோகவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் சினேகா குடும்பத்தினர் மற்றும் தோழிகள், நெருக்கமான உறவினர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.