யோகிபாபுவின் காவி ஆவி நடுவுல தேவி.. 11 தோற்றங்களில் நடிக்கிறார்...

Yogi Babu acting11 Diffrent Role

by Chandru, Oct 4, 2019, 07:23 AM IST

காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோக்களாகி விட்டனர். அந்த வரிசையில் இப்ப யோகிபாபுவின் காட்டில்தான் மழை.

காமெடியுடன் ஹீரோவாகவும் அடுத்து அவர் நடிக்கும் படம் காவி ஆவி நடுவுல தேவி. இதில் 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார்.

இதில், கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணிடைரக்டு செய்வதுடன் பிர்தான் வேடத்திலும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறுபோது, ”இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என்றார்.

You'r reading யோகிபாபுவின் காவி ஆவி நடுவுல தேவி.. 11 தோற்றங்களில் நடிக்கிறார்... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை