லாபர்டார் நாய்க்காக பாட்டு பாடிய யுவன் சங்கர் ராஜா.. அன்புள்ள கில்லி இயக்குனர் தகவல்..

When Yuvan Shankar Raja crooned for Ghilli, the Labrador Anbulla Ghilli

by Chandru, Oct 11, 2019, 18:06 PM IST

லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் அன்புள்ள கில்லி. இதில் மேலும் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுகிறது. இப் படத்துக்காக அரோல் கரோலி இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், இசையமைப்பாளர் அரோல் கரோலியும் நானும் யுவன் சார் பாடினால் பிரமாதமாக அமைவதுடன் படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நம்பி ட்யூனை அவருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆச்சரியமான முறையில், தனது ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பாடலை பதிவு செய்து கொள்ளும்படி உடனடியாக அவரிடமிருந்து அழைப்பு வந்தது ஆண் லாபர்டார் நாய் ஒன்றுக்காக குரல் கொடுத்து யுவன் சார் பாடியிருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு காதல் பாட்டு. ஆண் நாய் பெண் நாய் தோன்றும் இந்தக் காதல் பாடலில் இடம் பெறும் மெலிதான நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

தற்போது விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீநாத் கூறினார்.

You'r reading லாபர்டார் நாய்க்காக பாட்டு பாடிய யுவன் சங்கர் ராஜா.. அன்புள்ள கில்லி இயக்குனர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை