சந்தானம் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகம்..

Cricketer Harbhajan Singh make debut in Santhanams film

by Chandru, Oct 17, 2019, 19:23 PM IST

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் கோட்டபடி ராஜேஷ் தயாரிக்கிறார். கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இதில் சந்தானத்துடன் முக்கிய கேரக்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிப்பது, யுவன் சங்கர் ராஜாவும், ஹர்பஜன் சிங்கும் இணைந்திருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You'r reading சந்தானம் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை