இரட்டைவேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் புதிய ரிலீஸ் தேதி தெரிந்தது.. தீபாவளி போட்டியிலிருந்து விலகி நவம்பருக்கு சென்ற படம்..

VIJAY SETHUPATHIS SANGATHAMIZHAN RELEASE DATE ANNOUNCED

by Chandru, Oct 21, 2019, 22:35 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் சங்கத்தமிழன்.வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கி உள்ளார் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர்.

மேலும் சூரி, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றையதினம் விஜய்யின் பிகில். கார்தியின் கைதி ரீலீஸ் ஆகிறது.போட்டியை திவிர்ர்கும் நோக்குடன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது சங்கத்த்மிழன் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இரட்டைவேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் புதிய ரிலீஸ் தேதி தெரிந்தது.. தீபாவளி போட்டியிலிருந்து விலகி நவம்பருக்கு சென்ற படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை