ராஜமவுலி ஷூட்டிங்கை நிறுத்த கேட்டு அதிகாரியிடம் புகார்... 2 ஹீரோக்கள் அதிர்ச்சி...

Advertisement

பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். பின்னர் ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் அப்படத்தை இயக்க தொடங்கி உள்ளார். இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஆர்ஆர் ஆர் படம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த சரித்திர பின்னணி கதையாகயும், வெள்ளைக்கார ராணுவத்தை எதிர்த்து போரிட்டவர்களின் கதையாகவும் இது அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆந்திர மாநிலம் நரசிம்பட்டணம் ஆர்டிஓவிடம் அல்லூரி சீதா ராமராஜு இளைஞர் சங்க தேசிய தலைவர் வீரபத்ரா என்பவர் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பை தடை செய்யக் கேட்டு புகார் அளித்திருக்கிறார்.

அதில்,'அல்லூரி சீதா ராம ராஜு அவரது உறவினர் கோமரம் பீம் ஆகியோரின் கதையாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமவுலி இயக்குகிறார். ஆனால் நிஜத்தில் அவர்கள் பிறந்த இடம் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை படத்தில் தவறாக சித்தரிக்கிறார்கள். எனவே படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி உள்ளார். புகார் பற்றிய தகவல் அறிந்ததும் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் அதிர்ச்சி அடைந்தனர். இப்படத்துக்கு இருவரும் மாதக்கணக்கில் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராஜமவுலி அளித்த ஒரு பேட்டியில், 'ஆர்ஆர்ஆர் படத்தை பொறுத்தவரை ஒரு கற்பனை கதை' என தெரிவித்திருக்கிறார் .

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>