விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கும் காஜல் அகர்வால். கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
தற்காப்பு கலை கற்றவராக நடிக்க உள்ளதாக அவரே தெரிவித்த நிலையில் தற்போது அவரது கதாபாத்திரம்பற்றி மற்றொரு சீக்ரெட் வெளியாகி உள்ளது. 85 வயது மூதாட்டி வேடத்தில் காஜல் நடிக்க உள்ளார். இந்தியன் முதல்பாகத்தில் இந்த வேடத்தை சுகன்யா ஏற்றிருந்தார்.
இதற்கு முன் இதுபோன்ற வேடம் ஏற்காத காஜலுக்கு இவ்வேடத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும். அதாவது சேனாதிபதிக்கு(கமல்) ஜோடியாக அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில், 85 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால். இப்படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
ஷங்கருடன் முதன்முறையாக படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்காக சண்டை காட்சிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் படமாக்கப்பட்டு வருகிறது. பீட்டர் ஹைன் சண்டை காட்சிக்கு 2000 ஆட்களுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக, அதே சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.