செலவுக்கு பயந்து பட தயாரிப்பை கைவிடும் ஹீரோயின்... காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி தந்த ஆலோசனை குழு..

Kajal Aggarwal drops production plans

by Chandru, Oct 30, 2019, 18:01 PM IST

விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி என முன்னிணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

இவருக்கு கோடிகளில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஏற்கனவே ரேவதி, கங்கனா ரனாவத் உள்ளிட்ட சில நடிகைகள் டைரக்டர்களாகியிருக்கின்றனர். இன்னும் சில நடிகைகள் இயக்குனர் ஆகும் ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் காஜல் அகர்வால் சற்று வித்தியாசமாக தயாரிப்பாளர் ஆக ஆசைப்பட்டார். இதையடுத்து கதை கேட்க ஆரம்பித்தார். இயக்குனர் பிரசாத் வர்மா கூறிய ஆவ் 2 என்ற ஸ்கிரிப்ட் பிடித்ததால் தயாரிக்க முன்வந்தார். இதற்காக காஜல் அகர்வால் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கவும் முடிவு செய்தார்.

அதற்கான பணிகள் ஜரூராக நடந்துகொண்டிருந்த நிலையில் பட தயாரிப்புக்கு ஆகும் செலவு பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்துகொண்டார். தயாரிப்பு செலவுக் கான பெரும் தொகையை அறிந்ததும் திடுக் கிட்டார். இவ்வளவு செலவு ஆகுமா என்ற அதிர்ச்சி யுடன் கேட்டவருக்கு ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டில் படம் முடியாவிட்டால் மேலும் செலவுகள் இருக்கும் என்று கூறியதை கேட்டதும் உற்சாகம் இழந்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டிருக்கிறாராம் காஜல். ஏற்கனவே தயாரிப்பதாக தெரிவித்திருந்த படத்தையும் வேறு யாராவது தயாரிக்க முன் வந்தால் அவரிடம் அப்படத்தை ஒப்படைக்க எண்ணி உள்ளார். இதையடுத்து தான் தொடங்கிவிருந்த பட நிறுவன ஐடியாவையும் கைவிட்டிருக்கிறார்.

You'r reading செலவுக்கு பயந்து பட தயாரிப்பை கைவிடும் ஹீரோயின்... காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி தந்த ஆலோசனை குழு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை