நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் நேர் கொண்ட பார்வை அடுத்து அவர் மீண்டும் அஜீத் நடிக்கும் 61 வது படத்தை தயாரிக்கிறார்.
இப் படத்தின பூஜை சில தினங்களுக்கு முன் நடந்தது. படத்திற்கு இன்னும் ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திர தேர்வு நடந்து முடியவில்லை, படப்பிடிப் பும் தொடக்கவில்லை. அதற்குள் அஜீத் நடிக்கும் 61 வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பதுபற்றி அஜீத் ரசிகர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று ஒரு தரப்பும். புஷ்கர் காயத்ரி இயக்குவார் என்று இன்னொரு தரப்பும் ஹேஷ் டேக் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் நியாயமாகவே இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அஜீத் நடித்த தீனா படத்தை இயக்கினார். இப்படத்துக்கு பிறகுதான் அஜீத்தை தல என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கி னர். தற்போது முருகதாஸ், ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார். அதேபோல புஷ்கர் காயத்ரி ஏற்கனவே மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.
இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது, இவர்கள்தான் அஜீத் படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் அடிபட்ட தால் அவர்கள் பெயரையும் தல ரசிகர்கள் இந்த ஆட்டத்தில் கொண்டு வந்திருக்கின்றனர். அதை பரபரப்பாக்கிக்கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம்.
இதற்கிடையில் இன்னும் சிலர் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் ஆகியோர் பெயர்களும் அஜீத்தின் 61வது படத்திற்கான பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.. இவர்களில் யார் அஜித்தின் 61வது பட இயக்குனர் என்பதை ஹேஷ் டேக்கில் பதிவிட்டு டிரெண்டு ஆக்கி வருகின்றனர் தல ரசிகர்கள்.