கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் வரும் 7ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி சிறாப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான் ஏற்பாடுகளை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் செய்கிறது, கமல்ஹாசன் பிறந்தநாளான வரும் நவம்பர் 7ம் தேதி அன்று அவரது சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தை ஸ்ரீனிவாசன் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். அடுத்த நாள் நவம்பர் 8 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட அவரது அலுவலகத் தில் கமலின் குருநாதர் கே.பாலச்சந்தர் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
அன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் கமல்ஹாசனின் ஹேராம் படம் பிரத்யேகமாக திரையிடப் பட இருக்கிறது. இதில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த நாள் நவம்பர் 9 ஆம் தேதி அன்று இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் உறுதியாக வில்லை. இதுவரை பிறந்தநாள் விழாக் களை பெரிதும் கொண்டாடாமல் இருந்து வந்த கமல்ஹாசன் இம்முறை கொண்டாட்டத்திற்கு சம்மதித்திருக்கிறார். கமலுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வாழ்த்து கிறார். ஒரே மேடையில் கமல். ரஜினி பங்கேற்கின்றனர்.