விஜய் நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இபடத்தை அட்லீ இயக்கியிருந்தார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான பிகில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. கால்பந்து அணியில் அணியின் கேப்டனாக தென்றல் கதாபாத்திரத்தில் அம்ரிதா ஐயர் நடித்திருந்தார்.
அம்ரிதா பிறந்தநாளையொட்டி நடிகை நயன்தாரா அவருக்கு அழகான வாட்ச் ஒன்றை அவருக்கு பரிசளித்துள்ளார். பரிசை கண்டு குஷியான அம்ரிதா அந்த படத்தை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.