மவுன குரு, கோ படங்களில் நடித்தவ்ர் காஜல் பசுபதி. இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்க முடியாமல் போன சுர்ஜித் நிகழ்வு குறித்து குறிப்பிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த தகவலை பகிர்ந்த காஜல், லாரன்ஸ் மாஸ்டர் உங்கள் நம்பர் எங்களிடம் இல்லை. நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்.
வாழ்க்கை குழந்தை இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. குழந்தையை தத்தெடுக்க உதவ முடியுமா ? குழந்தைக்கான செலவு களை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.