ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார்.
அடுத்த படம் இயக்கவதற்கான பணிகளுக்கு இடையே சொந்த பட நிறுவனம் தொடங்கி மாறுபட்ட படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே பரியேறும் பெருமாள் வெளியானது. இதையடுத்து அவர் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் தணிக்கை சான்றிதழுக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்தது மட்டுமின்றி படக்குழுவினரை பாராட்டியும் உள்ளனர்.
இதுகுறித்து பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், 'தணிக்கைகுழுவின் பாராட்டுதலோடு குண்டு படத்திற்கு " U " சான்றிதழ். மகிழ்ச்சி..! என தெரிவித்துள்ளார்.