திருவள்ளூர் உருவத்தில் கமல் போஸ்டரால் புதிய சர்ச்சை...நடிகரின் பிறந்த நாளில் ரசிகர்கள் கொளுத்திபோட்ட வெடி..

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.7) 66வது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
வாழ்த்து போஸ்டரில் வாழ்த்து மட்டும் சொல்லாமல் ஒரு வில்லங்கத்தையும் இழுத்துவிட்டுள்ளனர். திருவள்ளுவர் போல் கமலின் உருவத்தை போல்சித்தரித்து போஸ்டர் அடித்திருப்பதுடன் அந்த போஸ்டரில்,'அகர முதல எழுத்தெல்லாம் உலக நாயகன் முதற்றே உலகு ' என குறளை மாற்றி எழுதியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்திய விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது குறித்து கமல் கருத்து கூறும்போது,'திருவள்ளுவர் எல்லா மதத்தினரும் தனதாக்கி கொள்ள விரும்புகிறார்கள். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதுதான் உண்மை. அவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை' என்றார்.
எல்லோருக்கும பொதுவானவர் என்று திருவள்ளுவர் பற்றி கமல் குறிப்பிட்டிருக்கம் நிலையில் கமலேயே திருவள்ளுவர்போல் போஸ்ட் அடித்து ஒட்டியிருப்பது பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.