வில்லங்கத்தில் விஜய்சேதுபதி... நடிகருக்கு எதிராக கமல்ஹாசன் கருத்து..

by Chandru, Nov 9, 2019, 20:07 PM IST

திரையுலகில் எல்லோருக்கும் நல்ல பிள்ளை யாக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கென தனி மார்க்கெட் இருந்தாலும் சீனியர் நடிகர்கள் படங்களில் வில்லனாக நடிக்க அழைத்தால் நடிக்க ஒப்புக்கொள்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் தற்போது தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.  தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் பட புரமோஷனுக்கு வரும்படி அழைத்தால் அதிலும் கலந்துகொள்கிறார் விஜய்சேதுபதி. இப்படிப்பட்டவர் தற்போது பலசரக்கு தொழில் செய்யும் வியபாரிகளுக்கு எதிரியாக தெரிகிறார். மண்டி என்ற விளம்பர படமொன்றில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இதனால் பலசரக்கு மளிகை வியாபாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் விஜய்சேது பதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது சில வியாபாரிகள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய்சேதுபதி நடித்து கவனத்தை பெற்று வரும்  செயலி விளம்பரம் மூலம் பலசரக்குத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும். இதை உணர்ந்து அந்த விளம்பரத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகவேண்டும். இல்லையென்றால் , எங்கள் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அவரின் தொழிலில் எந்த வகையில் எங்களால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்'என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

விஜய்சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்ததுகுறித்து நடிகர் கமலிடம் கேட்டபோது,'சில விளம்பரத்தில் நடிக்கும்போது அதன் பாதிப்பை உணராமல் நடிப்பதால் ஏற்படும் விளைவு இது. இதில்   நடித்திருக்கூடாது என தெரிவித்திருந்தார்.


Leave a reply