அதிதி பாலனும் கவர்ச்சிக்கு மாறினார்... நீங்களும் துணிஞ்சிட்டீங்களா...

Aditi Balan takes the hot route

by Chandru, Nov 9, 2019, 22:47 PM IST
அருவி படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து முதல்படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் அதிதி பாலன். இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுதது அதிதிக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவரோ பல படங்களை கதை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்று ஒதுக்கித் தள்ளினார். இதில் பல பட வாய்ப்புகளை இழந்தார்.
கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் ஏற்கனவே அவர் ஒருமுறை அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் கவர்ச்சி கதாநாயகி வேடங்களில் நடிக்க கேட்டு அவரை இயக்குனர்கள் அணுகவில்லை. ஒரு கட்டத்தில் கதை சொல்லவே இயக்குனர்கள் யாரும் வராத நிலை ஏற்பட்டது. தற்போது மலையாளத்தில் படவேட்டு என்ற படத்தில் நடிக்கிறார்.
மலையாள படத்தில் நடிக்கச் சென்ற அதிதிக்கு கோலிவுட், டோலிவுட் பட வாய்ப்பு என்பது முற்றிலுமாக நின்றுபோனது. இதில் உஷாரானாவர் தற்போது கவர்ச்சிக்கு தயார் என்பதுபோல் சிக்னல் காட்டியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் புதிதாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து நெட்டில் பரவவிட்டிருக்கிறார். சேலை கட்டினாலும் அதிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை இப்படங்கள் உணர்த்தியிருப்பதாக சில ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர். அதேசமயம், அதிதி நீங்களும் கவர்ச்சிக்கு துணிஞ்சிட்டிங்களா என்று சிலர் கேட்டிருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை