பிரபல இந்தி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதை எட்டிய இவருக்கு நேற்று அதகாலையில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவரை தீவிரசிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டது. ஆனாலும் மற்றொரு தகவல்,அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும். வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசகருவி அவருக்கு பொருத்தப்பட்டிருப்பதாகவும் முதலில் வந்த தகவ்ல் தெரிவித்தாலும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்வர். 36 இந்திய மொழிகள், சில வெளிநாட்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 30ஆயிரம் பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார். இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் பெற்றிருக்கிறார். அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.