தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதல்கட்டமாக முடிந்து 2ம் கட்டமாக டெல்லியில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இதில் கல்லூரி பேராசியராகவும், கேங்ஸ்டராகவும் விஜய் இருவித கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இதற்கிடையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் தீபாவளியை யொட்டி திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்திருப்பதாக அப்படத்தில் கால்பந்தாட்ட சிங்கப் பெண் அணியில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
தளபதி 64 படம் எப்போது வெளியாகும் என்று உறுதியான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் தளபதி 65 படம் பற்றி ரசிகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர். அடுத்து விஜய்யை இயக்கப்போவது யார் என்ற பேச்சு நிலவி வந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் தடையற தாக்க, தடம் படங்களை இயக்கியவர். மேலும் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சில வருடங் களுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது.
பின்னர் மனஸ்தாபம் காரணமாக அப்படத்திலிருந்து விஜய் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ் திருமேனி இயக்குகிறார் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும் நண்பன் படத்துக்கு பிறகு ஷங்கர் மீண்டும் தளபதி 65 படத்தில் இணையக்கூடும் என்றும் பேச்சு உள்ளது.