கல்வி நிறுவன தற்கொலைபற்றி கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கவலை.. பாகுபாடு காட்டி கொல்வது தொடர் கதையாகிறது..

by Chandru, Nov 15, 2019, 15:17 PM IST
Share Tweet Whatsapp

சென்னை ஐஐடியில் சேர்ந்து படித்து வந்தார் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப். இவர் திடீர் தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் இதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.  கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில்,'மாணவர்களின் கல்வியை அவர்களது பொருளாதார அந்தஸ்த்து நிர்ணயிக்கக்கூடாது. ஆனால் அது சிலரால் தொடர்ச்சியாக பொருளாதார ஏற்ற தாழ்வு பார்க்கப்பட்டு கல்வி நிறுவனங்களை அழித்து வருகிறது. பாத்திமாவின் மரணம் எதிர்பாராதது.

இதுபோன்ற கிரைம்கள் எதிர்காலத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத்திமாவின் மரணம் தமிழக மற்றும் இந்திய மக்களுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது' என குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a reply