நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை...ரஜினியின் நெருங்கிய நண்பர்...

by Chandru, Nov 20, 2019, 18:11 PM IST
Share Tweet Whatsapp
மலையாள படவுலகில் காமெடி நடிகராகி, பிறகு ஹீரோவாக நடித்து இயக்குனராகவும் இருப்பவர் ஸ்ரீனிவாசன். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக் காரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
ஸ்ரீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது  உடல்நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையாம். கவலையி ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் உடனிருந்து ஸ்ரீனிவாசன் நலம்பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
ஸ்ரீனிவாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய நண்பர். மலையாளத்தில் ஸ்ரீனிவாசன் எழுதிய கத பறயம்போல் என்ற படத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். அப்படம்தான் தமிழில் ரஜினி நடிக்க பி.வாசு இயக்கத்தில் குசேலன் என்ற படமாக ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a reply