ஐஸ்வர்யாராயை தொடர்ந்து சினிமாவுக்கு வரும் உலக அழகி... 2,0 வில்லன் ஜோடியாக நடிக்கிறார்..

Nov 21, 2019, 14:27 PM IST

உலக அழகி ஐஸ்வர்யாராய் தமிழ், இந்தி என இந்திய திரையுலகில் ஒன்றுக்கு இரண்டு ரவுண்டு வந்துவிட்டார்.

இப்போது குடும்பம் குழந்தை என்றாகிவிட்டாலும் அவ்வப்போது படங்கள், உலக பட விழாக்கள் என்று தலை காட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் புதிய உலக அழகி மனுஷி சில்லர். திரை யுலகிற்குள் காலடியெடுத்து வைக்கிறார். அரியானாவை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்வானவர்.

வரலாற்று படமாக உருவாகிறது இந்தியில் உருவாகிறது பிருத்விராஜ். பிரித்விராஜ் சவுஹான் மன்னனின் வாழ்க்கையை மைய மாக கொண்டு சரித்திர படமாக இது உருவாகி றது. இப்படத்துக்கு பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர். பிரித்விராஜ் படத்தில் இளவரசி சன்யோகிதாவாக நடிக்கிறார் மனுஸ்ரீ சில்லர். இப்படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் பிருத்வி படத்தின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. இளவரசி வேடம் ஏற்கும் மனுஸ்ரீ சில்லர் அதற்காக பல்வேறு பயிற்சிகள் பெற்று வருகிறார்.


Speed News

 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST
 • மகாராஷ்டிராவில் ஒரே நாளில்

  4878 பேருக்கு கொரோனா

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

  Jul 1, 2020, 13:43 PM IST
 • ராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு

  கொரோனா தொற்று பாதிப்பு

  ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 

  ராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது. 

  Jul 1, 2020, 13:40 PM IST
 • தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு

  சி,பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவு

  சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால்,  வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். 

  Jun 30, 2020, 13:33 PM IST